12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரச...
தொட்டாற்சிணுங்கி கம்பீர்..! மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட்டில் போராடி தோல்வியில் இருந்து மீண்டு, போட்டியை டிரா செய்தது.
இந்தத் தொடரில் கடைசி டெஸ்ட் ஜூலை 31-இல் லண்டனில் ஓவல் திடலில் தொடங்கவிருக்கிறது.
பேட்டிங் பயிற்சியாளருடனும் சண்டை
ஓவல் திடலின் பிட்சை பார்வையிட சென்ற இந்திய அணியின் பயிற்சியாளர்களை பிட்சிலிருந்து 2.5 மீட்டர் தூரத்தில் இருந்தே பார்வையிடுமாறு ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், “பிட்ச்சிலிருது 2.5 மீட்டர் தூரத்தில் இருந்து பார்வையிடமாறும் கயிறைத் தாண்டி நின்று நில்லுங்கள் என்றும் கூறினார்கள். இதுமாதிரி நான் எங்கேயும் பார்த்ததில்லை.
நாங்கள் ஸ்பைக் காலணிகள் எதுவும் அணியவில்லை. அதனால், பிட்ச் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்காக நாங்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.
கம்பீர் சண்டையிட்டது ஏன்?
இந்தப் பிரச்னை குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் புகார் தெர்விப்பேன் எனக் கூற, பிட்ச் மேற்பார்வையிடுபவர்கள் “நீங்கள் எங்கு வேண்டுமானலும் சென்று புகார் தெரியுவிங்கள்” எனக் கூறினார்.
இந்தப் புள்ளியில் கோடக் தலையிட்டு, “நாங்கள் பிட்சை எந்தவிதமான சேதாரமும் ஏற்படுத்தவில்லை” எனக் கூறியுள்ளார்.
பிட்ச் மேற்பார்வையாளர் பேர்டிஸ், கம்பீர் ஏன் வாக்குவாதம் செய்தார்கள் என்ற தெளிவான விளக்கம் கிடைக்காவிட்டாலும் பிட்சில் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக பேசிக்கொண்டதாகத் தெரிகிறது.
தொட்டாற்சிணுங்கி கம்பீர்...
இந்த விவாதத்தில் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கூறாதீர்கள். நீங்கள் வெறுமனே பிட்ச் மேற்பார்வையாளர் மட்டுமே, அதைத் தாண்டி எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.
ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர் ஃபோர்டிஸ் களத்தில் இருந்து அவரது அறைக்குச் செல்லும் முன்பு ரீவ்ஸ் ஸ்போர்ட்ஸில், “இது மிகப்பெரிய போட்டி, கம்பீர் தொட்டாற்சிணுங்கியாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடைசி டெஸ்ட்டில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். அதனால், இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.