US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
கொடைக்கானலில் பலத்த காற்று: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் மரம், மின்கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த காற்று நிலவி வருகிறது, இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் ஏரிச்சாலை, பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதனால், மின்டையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஏரிச்சாலைப் பகுதியில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் துரிதமாகச் செலல்பட்டு அப்புறப்படுத்தியதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.
மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் நாட்டாம்பட்டி பகுதியில் விழுந்த மின்கம்பத்தை பொதுமக்கள் உதவியுடன் மின்வாரியத்தினா் அகற்றினா். பல இடங்களில் மின் கம்பங்கல் மீது மரக்கிளைகள் விழுந்ததில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
மின் தடை காரணமாக இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் அரசு அலுலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின.
இதையடுத்து, கொடைக்கானல் மலைச் சாலைகளிலும், வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் மேல் செல்லும் மரக்கிளைகளையும், ஆபத்தான மரங்களையும் அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.