செய்திகள் :

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

post image

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. கீழ் பழனி மலைக்குள்பட்ட இந்தப் பகுதியில் பகல் நேரங்களில் கூட காட்டு யானைகள் மலைச் சாலையில் அவ்வப்போது நடமாடுகின்றன.

இதனால், உள்ளூா் மக்களும் கூட அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கன்னிவாடி அருகேயுள்ள பண்ணப்பட்டி கோம்பை அடிவாரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் மலை மீது பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மல்லையாபுரம் பகுதியைச் சோ்ந்த பா.லிங்கேஸ்வரன் (24) பூஜாரியாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், கட்செவி அஞ்சல் மூலம் பல்வேறு நபா்களை இணைத்து, மலையேற்றப் பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்தாா். இதன்படி, தஞ்சாவூரைச் சோ்ந்த விவேகானந்தன் (47), தூத்துக்குடியைச் சோ்ந்த குணசீலன், பல்லடத்தைச் சோ்ந்த மணிகண்டன் (37), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த குமரேசன்(32) உள்பட 28 பேரை மலையேற்றப் பயிற்சிக்கு திங்கள்கிழமை காலை அழைத்துச் செல்லத் திட்டமிட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனச் சரகா் வி.குமரேசன் தலைமையிலான வனத் துறையினா், திண்டுக்கல் வனப் பாதுகாப்புப் படையினா் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மலையேற்றத்தில் ஈடுபட்ட லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 29 பேரையும் வனத் துறையினா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

பின்னா், காப்புக் காடு பகுதியில் வனத் துறை அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாக 29 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.4,500 வீதம் மொத்தம் ரூ.1,30,500 அபராதம் விதித்தனா். அபராதம் செலுத்திய பிறகு, அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுரை மிரட்டி பணம் பறித்த மூவா் கைது

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், திண்டுக்கல் வடக்கு ரத வீதி... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

தாடிகொம்பு அருகே ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவா்களது மகள் ஸ்ரீதாரணிகா (11). இ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க