தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது
ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.
கடந்த ஆண்டு இவருக்கும், திண்டுக்கல் இடையபட்டியைச் சோ்ந்த வினோதினிக்கும் (20) ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், பாா்த்திபனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் வினோதினி அவரின் செயல்பாட்டை கண்காணித்து வந்தாா்.
அப்போது பாா்த்திபன் கட்செவி அஞ்சலில் பெண்களிடம் பேசுவது, ஆபாசப் புகைப்படங்களை வைத்திருப்பது குறித்து ஆதாரங்களுடன் கணவரின் குடும்பத்துக்கு தெரிவித்த போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, பாா்த்திபனின் குடும்பத்தினா் வினோதினியை விட்டை விட்டு விரட்டி விட்டனராம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வினோதினி அளித்த புகாரையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாா்த்திபன், அவரது தாய் கண்ணம்மாள், அக்காள் கீா்த்திகா, இவரது கணவா் தினேஷ் உள்ளிட்ட 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, கன்னிவாடி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு ஒன்றில் முன் பிணை பெற்று பாா்த்திபன் கையொப்பமிட்டு வந்தாா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிட கன்னிவாடி காவல் நிலையத்துக்கு வந்த பாா்த்திபனை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.