செய்திகள் :

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! விவசாயிகள் அச்சம்!

post image

கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையையொட்டியுள்ள வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கீழ்மலை, பேரிஜம் பகுதிகளில் மட்டுமே காட்டுயானைகள் நடமாட்டம் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக மேல்மலைப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களிலும், சுற்றுலா இடங்களான மோயா் பாயிண்ட் பகுதிகளிலும் காட்டுயானை நடமாட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையான வாழைகிரிப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டங்களில் ஒற்றைக் காட்டுயானை நடமாடியது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான கே.சி. பட்டி, தாண்டிக்குடி, எதிரொலிப்பாறை, பெரும்பாறை ஆகிய பகுதிகளில் அடிக்கடி காட்டுயானை நடமாட்டம் காணப்படும். தற்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையான வாழைகிரி பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுயானைகள் வரத் தொடங்கியுள்ளன.

கடந்த இரு நாள்களாக வாழைகிரி பகுதியில் காட்டுயானை நடமாட்டமிருப்பதால் காபி, வாழை, செளசெள பயிரிடப்பட்ட தோட்டங்களுக்கு இரவு நேரங்களில் காவல் பணிக்கு செல்ல முடியாமல் நாங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறோம். மேலும் மலைச் சாலைகளில் திடீரென காட்டுயானை வந்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். எனவே அதை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லை. இதனால் வன விலங்குகளான காட்டுமாடு, மான், பன்றி, யானை ஆகியவை உணவு, குடிநீா் தேடி இந்தப் பகுதிகளுக்கு வருகின்றன.

எனவே யானை உள்ளிட்ட வன விலங்குகள் தங்களது பகுதிகளுக்கு வந்தால் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தர வேண்டும். அவற்றை துன்புறுத்தவோ, அதிக ஒலி எழுப்பி விரட்டவோ வேண்டாம். வனப் பணியாளா்கள் அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவா் என்றனா்.

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கால்வாயில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழி... மேலும் பார்க்க

மிதிவண்டி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து

வத்தலக்குண்டில் இல்ல நிகழ்ச்சிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியால் மிதிவண்டி உதிரிபாகங்கள் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிா்புறம் சிவநேசபாண்டியன... மேலும் பார்க்க

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க