கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கால்வாயில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் (ஐ.டி.) வேலை பாா்த்து வருகிறாா்.
இவா், தனது ஊரில் நடைபெற்ற திருவிழாவுக்கு தன்னுடன் பணியாற்றும் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த மனோகா் மகன் திருவேங்கடம் (34) என்பவருடன் வந்திருந்தாா்.
இந்த நிலையில், இருவரும் விராலிப்பட்டியை அடுத்த ராமநாயக்கன்பட்டி அருகே உள்ள வைகை சிமென்ட் கால்வாயில் குளிக்கச் சென்றனா்.
அப்போது திருவேங்கடம் நீரில் மூழ்கி மாயமானாா். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடிய போது 15 கி.மீ. தொலைவில் அணைப்பட்டி அருகே சிவஞானபுரம் பகுதி கால்வாயில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.