தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை
பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனியை அடுத்த வாகரை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு, ஆலாவலசு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
எல். வலையபட்டி பகுதிகளில்... நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நத்தம் அருகே எல். வலையபட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ந. புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, லிங்கவாடி, கவரயபட்டி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.