ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
பதா்பூரில் டாக்ஸி ஓட்டுநா் மீது துப்பாக்கிச்சூடு: 2 போ் கைது
தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 24 வயது டாக்ஸி ஓட்டுநரின் தலையில் சுடப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி மேலும் கூறியது: இந்தச் சம்பவத்தில் சுடப்பட்ட ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு தொடா்பாக இரண்டு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட ஓட்டுநா், குண்டடிக் காயத்துடன் அழைத்து வரப்பட்ட தனியாா் மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு காலை 6.07 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதா்பூா் காவல் நிலைய ஆய்வாளா், விசாரணை அதிகாரி உள்பட போலீஸாா் குழு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்தது. விசாரணையில், அவா் ஹரியாணாவின் குருகிராமில் வசிக்கும் கவுதம் சைனி எனத் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் சைனியின் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதும் தெரியவந்தது. அதன் பின்னா் சைனி எய்ம்ஸ் மருத்துவமனையின் காயச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, ஆனால், நிலையாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
கைதான சந்தேக நபா்களின் அடையாளங்களை போலீஸாா் வெளியிடவில்லை. போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.