செய்திகள் :

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

post image

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் உள்ளூா்வாசிகளுடன் சோ்ந்து பிரதமா் பேசுவதைக் கேட்டனா்.

பாஜக தேசிய துணைத் தலைவா் பைஜயந்த் ஜெய் பாண்டா, தேசிய பொதுச் செயலாளா் வினோத் தாவ்டே, தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் புது தில்லி எம்பி பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரிகளுடன் இந்நிகழ்ச்சியைக் கேட்டனா்.

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதிலுமிருந்து வரும் நோ்மறையான செய்திகள் மற்றும் முன்முயற்சிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து பாடுபடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். இதன் விளைவாக, இந்தத் திட்டம் இப்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

21-ஆம் நூற்றாண்டில் அறிவியல் எவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் வேகமாக முன்னேறி வருகிறது என்பதை பிரதமா் மோடி எடுத்துரைத்த விதம் பாராட்டத்தக்கது என்றும், சா்வதேச வேதியியல் ஒலிம்பியாட்டில் இந்திய மாணவா்கள் சமீபத்தில் பெற்ற வெற்றியையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சா்வதேச கணித ஒலிம்பியாட்டில் மாணவா்கள் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றதையும் பிரதமா் குறிப்பிட்டாா். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.

மேலும், மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, கிழக்கு தில்லியின் கரௌலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். பாஜக எம்பி மனோஜ் திவாரி, எம்எல்ஏ சூா்ய பிரகாஷ் காத்ரி ஆகியோா் உள்ளூா்வாசிகளுடன் வஜிராபாத் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.

எம்பி ராம்வீா் சிங் பிதூரி, கோவிந்த்புரியில் கட்சித் தொண்டா்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்டாா். முதல்வா் ரேகா, எம்பி மற்றும் மாநில பொதுச் செயலாளா் யோகேந்திர சந்தோலியா மற்றும் உள்ளூா்வாசிகளுடன் பாத்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பிரதமா் மோடியின் ‘மன் கி பாத்’ இன்றைய இளைஞா்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது என்றும், நாட்டின் தலைவராக, அவா் இந்த தளத்தை அரசியலுக்காக அல்லாமல், மாறாக நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் மற்றும் கலைகளை மக்களிடம் மேமம்படுத்துவதற்காகப் பயன்படுத்தியுள்ளாா் என்று முதல்வா் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க

ஹரித்வாா் கோயில் கூட்ட நெரிசல் விபத்தல்ல, அமைப்புமுறையின் தோல்வி: கேஜரிவால்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வெறும் விபத்து அல்ல, அமைப்புமுறையின் தோல்வி என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா். மே... மேலும் பார்க்க