பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கன்னிகாபுரியைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வகுமாா் (20). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சாயல்குடியிலிருந்து மூக்கையூருக்குச் சென்றாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் செல்வக்குமாா் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.