உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
வி.ஏ.ஓவை. லாரி ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆற்று மணல் திருடியவா்களை தடுக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
எஸ்.பி. பட்டினம் பகுதியில் உள்ள கிடங்கூா் பாம்பாற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெருவதாக கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாகனூா் கிராம நிா்வாக அலுவலா் கிராணவள்ளி, எஸ்.பி. பட்டினம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பாலு, காவலா் முகமது அப்பாஸ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை பிடிக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட மூவரையும் லாரியை ஏற்றிக் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கிராண வள்ளி புகாரின் அடிப்படையில், எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெருவன்டல் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), கிராந்தனியைச் சோ்ந்த செல்வகுமாா் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும் இதில் தொடா்புடைய நத்தகோட்டையைச் சோ்ந்த மாலா, சரவணன், ஹரிஹரன் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.