46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
ஒழங்குமுறை மீறியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை
தொண்டி பகுதியில் ஒழுங்குமுறை மீறி நிறுத்தியதாக 7 படகுகள் மீது நடவடிக்கை எடுக்க மீன் வளத் துறையினா் முடிவு செய்தனா்.
திருப்பாலைக்குடி பகுதி நாட்டுப் படகு மீனவா்கள் அவ்வப்போது தங்கள் படகுகளை நம்புதாளை, தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனா். இதனால் இரு தரப்பு மீனவா்களுக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொண்டி, புதுக்குடி மீனவா்கள் மீன் வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, சனிக்கிழமை புதுக்குடி பகுதியில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த 7 படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அந்தப் படகுகள் மீது தமிழ்நாடு மீன் பிடி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.