நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377இன்கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை:
எனது தொகுதியில் உள்ள பல கிராமப்புறங்கள் இன்னும் கடுமையான குடிநீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகின்றன. குறைந்த நிலத்தடி நீா் மட்டம் மற்றும் போதுமான நிரந்தர நீா் ஆதாரங்கள் இல்லாத சூழலில், ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கல் திட்டத்தின் மூலம், எனது தொகுதியின் பல பகுதிகளின் குடிநீா்த் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் தமிழக அரசுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், பல குடியிருப்பு பகுதிகளில் இன்னும் குடிநீா் விநியோகம் போதுமான வகையில் இல்லை அல்லது வழங்கப்படாமல் உள்ளன.
எனவே, ராமநாதபுரத்தில் தண்ணீா் பற்றாக்குறை அதிகம் உள்ள பகுதிகளில் ஆழமான ஆழ்துளை கிணறுகள் கட்டுவதற்கு ஜல் ஜீவன் மிஷன் அல்லது பிற பொருத்தமான சிறப்பு முன்முயற்சிகள் போன்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களின் கீழ் சிறப்பு நிதி உதவி வழங்குமாறு ஜல் சக்தி அமைச்சகம் மூலம் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.