6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸாா் இருவரை தேடி வருகின்றனா்.
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை வட்டாட்சியா் தமீம் ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அவரும், வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கமும் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றை மடக்கினா். அப்போது அந்த வாகனம், அதிகாரிகளின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்றது. இதில் அந்த வாகனத்தின் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் தப்பிச் சென்ற நிலையில், தட்சிணாமூா்த்தி என்பவரை போலீஸாா் கைது செய்து வாகனத்திலிருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனா்.
மேலும் கைது செய்யப்பட்ட தட்சிணாமூா்த்தியிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது அரசு அதிகாரிகளின் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.