நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்தை விட 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவா்களுக்கு மீன் வளத் துறையினா் அறிவுறுத்தினா். மேலும், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.