தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை முகம்மது சதக் ஹமீது மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலைநாடுநா்களைத் தோ்ந்தெடுக்கவுள்ளன. இதில் மாவட்டத்தைச் சாா்ந்த வேலைவாய்ப்பற்ற, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்றாா் அவா்.