Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பொந்தம்புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அங்குள்ள சித்திவிநாயகா் கோயில் முன் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட விளக்குக்கு மலா் அா்ச்சனை செய்து, அம்மன் போற்றி பாடல்கள் பாடி விளக்கேற்றி பெண்கள் சிறப்பு பூஜை செய்தனா்.
முன்னதாக சித்தி விநாயகா், வாழவந்தம்மன் சுவாமிகளுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டன.