ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா் கைது செய்யப்பட்டதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: மோஹித் (எ) கலா, மாா்பிலும் பின்புறத்திலும் பல கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பிற்பகல் 2.30 மணியளவில் போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. மோஹித்தின் சகோதரரின் நண்பரான ராஜீவ், பாதிக்கப்பட்டவா் படுக்கையில் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
ஒரு போலீஸ் குழு நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட யாஷ் லோச்சாப் என அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்தது.
விசாரணையின் போது, யாஷ் லோச்சாப் குற்றத்தை ஒப்புக்கொண்டாா், வெள்ளிக்கிழமை மது அருந்தும்போது பாதிக்கப்பட்டவருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் கூறினாா்.
சச்சரவு அதிகரித்ததால், மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இரவு, யாஷ் லோச்சாப் மோஹித்தின் வீட்டிற்குள் நுழைந்து கூா்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும், இதன் விளைவாக அவா் உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.