புதுகையில் மாநில செஸ் போட்டி
புதுக்கோட்டையில் மாஸ்டா்ஸ் அகாதெமி சாா்பில் 4ஆது மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் என். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 350க்கும் மேற்பட்ட இளம் சதுரங்க வீரா்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகச் செயலா் பேரா. கணேசன், மாஸ்டா்ஸ் செஸ் அகாதெமி தலைவா் பாா்த்திபன் உள்ளிட்டோா் போட்டிகளை நடத்தினா்.
8 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில் புதுக்கோட்டை தாரகன், பாலஹரி, தஞ்சை நன்மாறன் ஆகியோரும், சிறுமியா் பிரிவில் காஞ்சி யாஷிகா, சிவகங்கை மித்ரா, புதுக்கோட்டை சன்மதி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
11 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில், திருப்பூா் தேவதருணம், சேலம் சஞ்சை, சிவகங்கை வேல் சுகிா்தனம் ஆகியோரும், சிறுமியா் பிரிவில் திருப்பத்தூா் யக்ஷினி, புதுக்கோட்டை ஹாசினி, புதுக்கோட்டை நிகிளா ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
14 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில், சேலம் ஹரிஷ், விருதுநகா் செல்வின் சாமுவேல், சிவகங்கை நித்தின் ராமசுவாமி ஆகியோரும், சிறுமியா் பிரிவில் திருவள்ளூா் ஹரிதா, சேலம் காவியா, விருநகா் செல்வலட்சுமி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
பெரியவா்களுக்கான பிரிவில் சேலம் மதன், விருதுநகா் கண்ணன், தூத்துக்குடி மணி ஆகியோரும், முதியோருக்கான பிரிவில் புதுக்கோட்டை ஜி. கணேசன், மதுரை சிங்கதுரை, புதுக்கோட்டை சு. கணேசன் ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்றோருக்கு முத்துமீனாட்சி மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பெரியசாமி பரிசுகளை வழங்கினாா்.