புதுகையில் அப்துல்கலாம் நினைவு நாள்
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் விதைக்கலாம் அமைப்பின் சாா்பில் 518 ஆவது வார மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினரும் கூடி அப்துல்கலாமின் பொன்மொழிகளை உறுதிமொழிகளாக ஏற்றனா்.
நிகழ்ச்சியில், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஆா். முகமது அப்துல்லா, செயலா் ஆா். சங்கா், பொருளாளா் கண மோகன்ராஜ், செஞ்சுரி லயன்ஸ் சங்கத் தலைவா் சேது காா்த்திகேயன், கிங் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் துளசி, நேரு யுவகேந்திரா உதவித் திட்ட அலுவலா் நமச்சிவாயம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கச் செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, மரம் நண்பா்கள் ஒருங்கிணைப்பாளா் பேரா. சா. விஸ்வநாதன், வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளா் கவிஞா் மு. கீதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை விதைக்கலாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, ஸ்ரீமலையப்பன் ஆகியோா் செய்தனா்.