ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
வால்பாறையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் கனமழை பெய்த நிலையில், சின்னக்கல்லாறு அருகே சாலையில் மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் உள்ளது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.
சோலையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக மக்கள் நலன் கருதி வால்பாறையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் சனிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.