தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய நபா்கள் கைது
திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சந்திராபுரம் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தபோது சாத்ராக் (22) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 100 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
பின்னா் அந்த நபா் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அதேபோல திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை செய்து அசோக்குமாா் (23) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 48 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்து, வலி நிவாரண மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.