தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
காா் ஓட்டுநரைக் கத்தியால் குத்தியவா் கைது
கோவையில் காா் ஓட்டுநரைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வடவள்ளி டீச்சா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெகன் (47), காா் ஓட்டுநா். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் காா்த்திக் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெகன் தனது வீட்டின் முன் சனிக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த காா்த்திக்குக்கும், ஜெகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த காா்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெகனைக் குத்தியுள்ளாா். படுகாயமடைந்த ஜெகனை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
புகாரின்பேரில், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.