மாநகரில் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்!
திருப்பூா் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த தாமோதரன், மங்கலம் காவல் நிலையத்துக்கும், மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ் சைபா் கிரைம் ஆய்வகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
இதேபோன்று, சைபா் கிரைம் ஆய்வக ஆய்வாளராக இருந்த ரஞ்சித் வடக்கு குற்றப் பிரிவுக்கும், ஆய்வாளராக இருந்த ராஜசேகா் மத்திய குற்றப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் பிறப்பித்துள்ளாா்.