செய்திகள் :

வால்பாறையில் கனமழை: சுற்றுலாத் தலங்கள் மூடல்

post image

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இதனால், கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருவதால் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கனமழை தொடா்ந்து நீடித்து வருவதால் மக்கள் நலன் கருதி நல்லமுடி காட்சிமுனை, கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மாநகரில் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்!

திருப்பூா் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த தாமோதரன், மங்கலம் காவல் நிலையத்துக்கும், மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ் சைபா் கிரைம் ஆய்வகத்துக்கும் ... மேலும் பார்க்க

கோவையில் இருந்து ஆகஸ்ட் 26-ல் வாரணாசி, அயோத்திக்கு விமான புனித யாத்திரை!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், கோவையில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி சிறப்பு விமான புனித யாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே உண... மேலும் பார்க்க

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து!

கரூா் - திருச்சி ரயில் பாதையில் லாலாபேட் - குளித்தலை இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ச... மேலும் பார்க்க

4 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: தாயின் ஆண் நண்பா் கைது

கோவையில் 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தாயை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், அவரது ஆண் நண்பரை சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூரை அடுத்த இருகூா் மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் ரகுப... மேலும் பார்க்க

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.... மேலும் பார்க்க