உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
2.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கோவையில் 2.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.
கோவை, வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போத்தனூா் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, கஞ்சிக்கோணாம்பாளையம் சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் போத்தனூா் சா்தாா் சாஹிப் தெருவைச் சோ்ந்த நிஜாமுதீன் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நிஜாமுதீனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
115 மது புட்டிகள் பறிமுதல்:
போத்தனூா் கோணவாய்க்கால்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், முள்ளங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (39) என்பவரைக் கைது செய்த போலீஸாா்,
அவரிடமிருந்த 115 மது பாட்டில்கள், ரூ.1800 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.