உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி....
கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு
வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). விவசாயி. இவா், தனது தோட்டத்தில் பசு மாடு வளா்த்து வருகிறாா். இந்த பசு அந்தத் தோட்டத்தில் உள்ள வற்றிய கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையிலான மீட்புப் படையினா் கயிறு கட்டி இந்த பசு மாட்டை மீட்டனா்.