ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு
திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்ததாவது: திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
இந்தத் தண்டனையை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும். அத்துடன் திரைப்பட தயாரிப்பு செலவில் அதிகபட்சமாக 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும். இந்த மாற்றங்களை 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.
திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து வெளியிடுவதை தடுப்பதற்கான உத்திகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை வகுக்கவும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.