செய்திகள் :

Divya Spandana: "தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி.!" - திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆதரவாக சிவராஜ்குமார்

post image

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு எதிராக தன்னுடைய கருத்தை நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களில் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

திவ்யா ஸ்பந்தனா | Divya Spandana
திவ்யா ஸ்பந்தனா | Divya Spandana

இது தொடர்பாக அவர், "நடிகர் தர்ஷனுக்கு எதிராக நான் என்னுடைய கருத்தை முன்வைத்தப் பிறகுதான் இப்படியான ட்ரோல்களை நான் எதிர்கொண்டு வருகிறேன்.

ஒரு சினிமா நட்சத்திரமாக நான் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், இம்முறை முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கிறது. இது வன்முறை நிறைந்த செயல்.

இதுபோன்றதொரு செயலை நான் இதற்கு முன் சந்தித்ததில்லை. ரேணுகாசாமிக்கு பதிலாக நான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றெல்லாம் பலர் ஆன்லைனில் பதிவுகள் போடுகிறார்கள்.

என்னைத் துன்புறுத்தும் 42 சமூக வலைதளக் கணக்குகளின் விவரத்தை நான் காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறேன். முன்பெல்லாம், பிரபலமாக இருப்பதால்தான் இப்படியான விமர்சனங்கள் வருகின்றன என நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், இந்த முறை அனைத்து விஷயங்களும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இது எனக்காக நான் கொடுத்த புகார் மட்டும் கிடையாது.

திவ்யா ஸ்பந்தனா | Divya Spandana
திவ்யா ஸ்பந்தனா | Divya Spandana

நான் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். பாலியல் வன்கொடுமை, கொலை, மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து நம்மைத் தொந்தரவு செய்யும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

பெண்கள்தான் ஒவ்வொரு நாளும் குறி வைக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு உள்ள அதே சுதந்திரம் எங்களுக்கு ஏன் இருக்கக் கூடாது? நாங்கள் ஏன் மௌனம் காக்க வேண்டும்?" எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆதரவாக தற்போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், "ரம்யாவுக்கு எதிராக நடந்து வரும் விஷயங்கள் கண்டிக்கத்தக்கவை. எந்தப் பெண்ணைப் பற்றியும் அப்படிப் பேசுவது சரியல்ல.

அதை நாம் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பெண்களை ஒரு தாயாக, அக்காவாக, மகளாக, மனைவியாக, முதன்மையாக, ஒரு தனி மனிதராக மதிப்பது மிகவும் முக்கியம்.

சமூக ஊடகம் மிகவும் வலிமையான ஆயுதம். அதை தனிநபரின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி, வெறுப்பையும் பொறாமையையும் பரப்புவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

உங்கள் நிலைப்பாடு சரியானது, ரம்யா. நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Mahavatar Narsimha Review: அதே நரசிம்ம அவதார கதைதான்; ஆனால் இம்முறை அனிமேஷனில்! - ஈர்க்கிறதா?

புராணக் கதைகளை மையப்படுத்தி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு வடிவங்களில் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. தற்போது விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ... மேலும் பார்க்க

Kantara A Legend: "250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.." - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன?

Pகன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரும்வெற்றி பெற்றது. காந்தாரா திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தபோது, அதன் முன் கதை... மேலும் பார்க்க

``சினிமா டிக்கெட் ரூ.200-க்கு மேல் வசூலிக்கக்கூடாது" - கர்நாடக அரசு சொல்வதென்ன?

தியேட்டர்களின் டிக்கெட் விலை ஏற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது கர்நாடக சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை. சாதாரண நாள்களில் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், நட்சத்திரங்களின் ... மேலும் பார்க்க