செய்திகள் :

Kantara A Legend: "250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.." - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன?

post image

Pகன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரும்வெற்றி பெற்றது.

காந்தாரா திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தபோது, அதன் முன் கதை காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 என்ற பெயரில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பில்...
படப்பிடிப்பில்...

அதன்படி 250 நாட்கள் நடைபெற்ற காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுகுறித்து சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே ஃபிலிம்ஸ்.

இது சினிமா அல்ல; தெய்வீக சக்தி!

வீடியோவின் பின்னணி குரலாக, "இதெல்லாம் கனவோடு ஆரம்பித்தது. நம் மண்ணின் கதையை மொத்த பிரபஞ்சத்துக்கும் பகிர்ந்துகொள்ளும் கனவு. நம்ம ஊர், நம்ம மக்கள், நம்ம நம்பிக்கை...

என்னுடைய கனவைத் துரத்த ஆரம்பிக்கும்போது ஆயிரக்கணக்கானோர் என்னுடன் இருந்தார்கள். ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு 250 நாட்கள் இந்த படத்தை எடுத்துகிட்டு இருக்கோம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் நம்பிய தெய்வம் என்னைக் கைவிடவில்லை.

என் முதுகெலும்பாக என் தயாரிப்பாளர்கள், என் குழுவினர் இருந்தனர். தினமும் செட்டில் அதிக மக்களைப் பார்க்கும்போது என் மனசில் ஓடிய விஷயம் ஒன்றுதான், இது சாதாரண சினிமா இல்லை, ஒரு தெய்வீக சக்தி.

ரிஷப் ஷெட்டி

"காந்தாரா உலகத்துக்கு உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்." எனப் பேசியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.

காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 படத்தில் ரிஷப், சப்தமி கவுடா, கிஷோர் மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

Kantara Shooting spot

வரலாற்றுத் திரைப்படமாக உருவாகும் இதில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து அனிருத் மகேஷ், ஷனில் கௌதம் கதை உருவாக்கத்தில் உதவியிருக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் பணியாற்றியுள்ளார்.

 காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 அக்டோபர் 2, 2025ல் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

``சினிமா டிக்கெட் ரூ.200-க்கு மேல் வசூலிக்கக்கூடாது" - கர்நாடக அரசு சொல்வதென்ன?

தியேட்டர்களின் டிக்கெட் விலை ஏற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது கர்நாடக சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை. சாதாரண நாள்களில் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், நட்சத்திரங்களின் ... மேலும் பார்க்க