'அண்ணா வழியில் 'ஆப்' மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!' - தவெக-வின் பலே ஐடியா!
கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு
நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோவில் அருகே இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 3.75 கோடி மதிப்பில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை பகலில் இந்தப் பணிகளின்போது ஒரு பகுதியில் இருந்து கான்கிரீட் கலவை பெயா்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் நேரில் சென்று பாா்வையிட்டனா். அந்தநேரத்தில், யாரும் பணியில் இல்லாததால் தொழிலாளா்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.