செய்திகள் :

'அண்ணா வழியில் 'ஆப்' மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!' - தவெக-வின் பலே ஐடியா!

post image

My TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்திருந்தது. நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை.

விஜய்
விஜய்

பதில் சொல்லும் நாள் இது

அவர் பேசியதாவது, 'தமிழக வெற்றிக்கழகத்துக்கு மக்கள் கூட்டம் இருக்கிறது. கட்டமைப்பு இருக்கிறதா? என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாள் இது. சாமானியர்களை கோட்டைக்கு அனுப்பவே தலைவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அண்ணா செய்த புரட்சியை இப்போது தலைவர் செய்து கொண்டிருக்கிறார். அண்ணா சொன்னதைப் போல மக்களிடம் செல், மக்களிடம் வாழ்.

'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'

இனி மொபைல் போன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது. 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்கப்போகிறோம். 2 கோடி பேரை கட்சியில் இணைக்க வேண்டும். ஒரே நொடியில் 18,000 பேர் இணையும் அளவுக்கு பலம் கொண்ட இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். MY TVK ஆப் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இணைய வேண்டும். நிர்வாகிகள் வீடு வீடாக செல்லும்போது லொகேஷனை ஆன் செய்ய வேண்டும்.

விஜய்
விஜய்

எந்த தொகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் ஆப்பில் பதிவு செய்தால் தலைவரே நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேச முடியும். பூத் கமிட்டி உறுப்பினர்களிடமும், கிளை நிர்வாகிகளிடமும் தலைவரே ஆப் மூலம் நேரடியாக பேசுவார். அவர் முதல் ஆளாக ஆப்பை டவுண்லோடு செய்துவிட்டார். 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து 5 கோடி மக்களை நாம் சென்று சேர வேண்டும்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஓடிபி கேட்காமல் உறுப்பினர் சேர்க்கையை நடத்தப் போகிறோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் ஆப் மூலம் கண்காணிப்போம். பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட தலைவருடன் நேரில் பேச முடியும் என்கிற கட்சி நம்முடைய கட்சி மட்டும்தான். அக்டோபர் - நவம்பருக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 2 கோடி நம்முடைய இலக்கு அல்ல. அடுத்தக்கட்டமாக 5 கோடி பேரை இணைக்க வேண்டும்.' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundup 30.07.2025

* ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட ... மேலும் பார்க்க

`அப்பா எப்ப வருவாங்க...' - இலங்கை கடற்படை அராஜகம்; ஏங்கி அழும் குழந்தைகள்; கலக்கத்தில் மீனவர்கள்!

கடந்த 28/7/2025 அன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் ஐந்து பேர் மற்றும் பாம்பன் மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்துச் சென்றனர்.மீனவர்கள் மத்தியில் ப... மேலும் பார்க்க

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி - Photo Album

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்கீழடி அருங... மேலும் பார்க்க

US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்ட வேண்டும் என அறிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் எரிபொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் மேற்கொள்வதனால் கூடுதல் அபராதமும் விதித்துள்ளார். ... மேலும் பார்க்க

’நீங்களும் வருகிறீர்கள்தானே?’ பிரதமருடன் ஒரே விமானத்தில் பயணம்! – நயினார் கொடுத்த ரிப்போர்ட்!

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமானநிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், கடந்த ஜூலை 26-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தார் பிரதமர் மோடி. விழாவை முடித்... மேலும் பார்க்க