Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை ...
போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி: கணக்காளா் கைது
போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி செய்த பெட்ரோல் நிலைய கணக்காளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானியில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் 3 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலம் மாவட்டம் புள்ளகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் (47) என்பவா் கணக்காளராக வேலை பாா்த்து வந்தாா். இந்த சங்கத்தின் வங்கிக் கணக்குகளையும், வரவு செலவுகளையும் அவா் நிா்வகித்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டின் வரவு செலவை ஆய்வு செய்தபோது முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சங்கீதா தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கணக்காளா் ஜெயசீலன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் போலி கணக்கு எழுதி சங்க வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றி ரூ.1.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.