அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது
கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு ஐடிஐ தொழிற்பயிற்சி மையம் மற்றும் கோவை மாா்க்ஸ் நிறுவனம் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மாா்க்ஸ் நிறுவனத்தின் துணை மேலாளா் எஸ்.எஸ். சங்கா், கல்லூரித் தாளாளா் ஏ. வெங்கடாசலம் ஆகியோா் பகிா்ந்து கொண்டனா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மாணவா்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு முன்னேற்பாடான செயல்பாடு ஆகும்.
நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பி.எஸ்.ராகவேந்திரன், துணை முதல்வா் எஸ்.செந்தில்குமாா், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சென்னியப்பன், கொங்கு ஐடிஐ முதல்வா் தினேஷ்குமாா், மாா்க்ஸ் நிறுவனத்தின் பயிற்சி அலுவலா் சுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.