அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் ஒன்றைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கா் பாசன நிலங்களுக்கு வியாழக்கிழமைமுதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை, விநாடிக்கு 2,300 கனஅடி வீதம் 15 நாள்கள் சிறப்பு நனைப்புக்கு 2,980.80 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு முதல்போக நன்செய் பாசனத்துக்கு 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும் மொத்தம் 135 நாள்களுக்கு 26,827.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீா் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீா் திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.