மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு: நிதிஷ் குமார் அறிவிப்பு!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நெருங்கியுள்ள நிலையில், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளதாக அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
2025இல் அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த நாங்கள் விரிவாகப் பணியாற்றி வருகிறோம்.
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் மம்தா பணியாளர்கள் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கெண்டுள்ளனர்.
ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1,000-க்கு பதிலாக ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மம்தா ஊழியர்களுக்கு பிரசவத்திற்கு ரூ.300 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 600 அதிகரிக்கும்.
முதல்வரின் அறிவிப்புக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநில சுகாதார அமைச்சராகத் தனது 17 மாத பதவிக்காலத்தில்ஆஷா மற்றும் மம்தா தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாகக் கூறினார்.
இந்த மேம்படுத்தப்பட்ட ஊக்கத்தொகை அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.