கறம்பக்குடி தீவனக் கடையில் திருடிய 3 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கால்நடை தீவனக் கடையில் திருடிய 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி நரங்கியப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆா். நடராஜன் (33). இவருக்குச் சொந்தமான கறம்பக்குடி செட்டிதெரு பகுதியில் உள்ள கால்நடை தீவனம் விற்பனை செய்யும் கடைக்கு திங்கள்கிழமை வந்த 3 போ் தீவனம் வாங்குவதுபோல கடை ஊழியரை திசைதிருப்பி ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த ஜா.முகமது மைதீன் (32), ப. சதாம் உசேன்(31), அ. உசேன் (24)ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.