செய்திகள் :

Masturbation: ``சுய இன்பத்திற்காக தினம் 30 நிமிட இடைவெளி'' - ஸ்வீடன் நிறுவனம் முடிவு; காரணம் என்ன?

post image

ஸ்வீடனைச் சேர்ந்த எரிகா லஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தனது ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு தனித்துவமான விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம், தினமும் 30 நிமிடங்கள் ஊழியர்களுக்கு சுய இன்பத்திற்கான (masturbation) இடைவேளையை வழங்குகிறது. இது மனநலத்தை மேம்படுத்துவதற்கும், பணியிடத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பின்னணி

எரிகா லஸ்ட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் எரிகா மற்றும் அவரது குழுவினர் மன அழுத்தம், கவனச்சிதறல் மற்றும் பதற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டபோது இந்த யோசனை உருவாகியுள்ளது.

Masturbation

ஆரம்பத்தில் இது ஒரு சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் இது நிரந்தர நிறுவனக் கொள்கையாக மாறியிருக்கிறது.

ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல் படி, எரிகா லஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் தனது வலைப்பதிவில் , "மாஸ்டர்பேஷன் மாதத்துடன் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கினோம். ஆனால், இதை நிரந்தர நிறுவனக் கொள்கையாக மாற்ற முடிவு செய்தோம். இது இன்று வரை அமலில் உள்ளது.

2021-ஆம் ஆண்டு, தொற்றுநோய் தொடங்கி ஒரு வருடம் கழித்து, நானும் எனது குழுவினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோம். தொற்றுநோய் கால வாழ்க்கை எங்களை பாதித்து, கவனம் குறைவதோடு, எரிச்சலும், பதற்றமும் அதிகரித்தது.

Masturbate
Masturbate

இதற்காக ’மாஸ்டர்பேஷன் மாதம்’ (Masturbation Month) என்று அறிமுகப்படுத்தி, ஊழியர்களுக்கு தினமும் கூடுதலாக 30 நிமிட இடைவேளையை வழங்கினோம். இதற்காக அலுவலகத்தில் ’மாஸ்டர்பேஷன் ஸ்டேஷன்’ என்ற தனியறையும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிறுவன கொள்கை சுய இன்பம் மகிழ்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனதை ஒருநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தி படைப்பாற்றலை ஊக்குவிக்க இது ஒரு முயற்சியாக இருக்கும் என்று எண்ணுகிறோம், பணிகளை முடிக்கும் உந்துதலை இது அதிகரிக்கவும் உதவுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறது.

Dhoni: "கணவர் கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள்" - ரிலேஷன்ஷிப் ஜோக் அடித்த தோனி!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு கூலான கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஜாலியான மனிதரும் கூட என்பதை நெருக்கமாக பின்தொடரும் ரசிகர்கள் மட்டுமே அறிவர்.சமீ... மேலும் பார்க்க

ஒரு வயது குழந்தை கடித்து உயிரிழந்த நாகப்பாம்பு... பீகாரில் நடந்த வினோதம்

பீகாரில் ஒரு வயது குழந்தை கடித்து நாகப்பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவமானது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.அந்தக் குழந்தையை குடும்பத்தினர் பெட்டியா ந... மேலும் பார்க்க

``வீட்டில் உணவு சமைக்க தினமும் 1,150 ரூபாய்'' கணவரிடம் வசூலிக்கும் மனைவி - கூறும் காரணம் என்ன?

இரண்டு குழந்தைகளின் தாயான ரே என்பவர் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவுக்காக தினமும் £ 10 (1,150 ரூபாய்) வசூலிப்பதாக டிக் டாக்கில் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கும் ஊதி... மேலும் பார்க்க

``பத்மஸ்ரீ விருதை பாதுகாப்பாக வைக்க கூட இடம் இல்லை'' - ஒழுகும் கூரை, வறுமையில் வாடும் துக்கு மாஜ்ஹி

2024-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் கவனிக்கத்தக்கவர் துக்கு மாஜ்ஹி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஒவ்வொரு நாளும் தனது மிதிவண்டியில் புதிய இடங்களுக்குச் சென்று, தரிசு நிலத்தில்5,000-க்க... மேலும் பார்க்க

MS Dhoni: `44 வயதிலும் எப்படி புத்துணர்ச்சியுடன்..?' - எம்.எஸ் தோனி அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் வீரார் எம்.எஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதைப் போல, 44 வயதைக் கடந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியு... மேலும் பார்க்க

Punjab வெள்ளம்: மாணவர்களுக்கு 'முதுகால்' பாலம் அமைத்த இளைஞர்கள் - கவனம் ஈர்க்கும் வீடியோ!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பருவ மழையால் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர், குர்தாஸ்பூர், மற்றும் தர்ன் தரன் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க