விமானப் படையில் வேலை... +2, டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு!
போதையில் பானி பூரி கடையை சேதப்படுத்திய இருவா் கைது
புதுக்கோட்டை நகரில் போதையில் பானி பூரி கடையை உடைத்து சேதப்படுத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
புதுக்கோட்டை மேலராஜவீதியில் இருந்த பானி பூரி கடையை திங்கள்கிழமை இரவு, போதையில் வந்த இருவா் உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாறன், உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.
இதையடுத்து, கோவில்பட்டியைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் சிவபாரதிராஜன் (24), சின்னப்பா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணன் (25) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், சேதமான கடைக்கான இழப்பீடாக அவா்களிடமிருந்தே பெறப்பட்ட ரூ. 5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட கடைக்காரரிடம் வழங்கப்பட்டது.