செய்திகள் :

Ed Sheeran: "என் குழந்தைகளுடன் சாதாரண மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்" - பாடகர் எட் ஷீரன்

post image

இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான எட்வர்ட் கிறிஸ்டோபர் ஷீரன், உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர்.

உலகின் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ‘+–=÷× Mathematics Tour’ என்ற இசைக் கச்சேரியை மும்பையில் நடத்தியிருந்தார். அந்த சமயத்தில் நெட்டிசன்களும் எட் ஷீரனின் 'Shape of You', 'Thinking Out Loud', 'Castle on the Hill', 'Photograph', 'Galway Girl', 'Perfect' போன்ற ஹிட் பாடலைகளை வைரல் செய்திருந்தனர்.

இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ஷீரன், ஷாருக் கான், ரஹ்மான் போன்ற நட்சத்திரங்களை மட்டும் பார்க்கவில்லை, பல சிறிய பள்ளிகளுக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் அமர்ந்து, பாடல்கள் பாடியிருந்தார்.

எட் ஷீரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள்

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் குடும்பம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் எட் ஷீரன், "நான் என் குடும்பத்துடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவேன். அதுவும் என் குழந்தைகளுடன் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், பொதுவெளியில் சுதந்திரமாக அவர்களைக் கூட்டிச் செல்ல முடியாதது வருத்தமானது.

எங்கே சென்றாலும் என்னுடன் ஒரு பாதுகாவலர், என் மனைவியுடன் ஒரு காவலர், என் குழந்தைகளுக்குத் தனித்தனிகே காவலர்கள் என எந்நேரமும் பாதுகாவலர்கள் சூழ எங்கும் செல்ல வேண்டியிருக்கிறது. சமீபத்தில் குழந்தைகளை கடத்துவதாக மிரட்டல் வந்ததால் இப்படியான பாதுகாப்பு தேவையாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளுடன் எட் ஷீரன்

இந்தப் பாதுக்காப்பு எல்லாம் இல்லாமல் என் குழந்தைகள் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நானும் என் குடும்பம், குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கையே வாழ விரும்புகிறேன். மக்களுடன் இயல்பாக வாழ்வதுதான் நிம்மதியான வாழ்வு. ஒரு கலைஞனாக நான் மக்களுடன் இருந்தால்தான் கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் ரசனையைப் புரிந்துகொள்ள முடியும்." என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் எட் ஷீரன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெள... மேலும் பார்க்க

The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! - முன்பதிவில் அசத்தும் நோலன் படம்

`இன்டர்ஸ்டெல்லர்', `இன்செப்ஷன்', `டெனட்' போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவ... மேலும் பார்க்க

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவ... மேலும் பார்க்க

Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!

பச்சை பசேலென உயர்ந்து நிற்கும் மரங்கள், அந்த உயரத்தைத் தாண்டி நிற்கும் ஓர் அழிந்து போன உருவம். மெதுவாக இலைகளைத் தின்று பூமி அதிர தன் இரு கால்களையும் தூக்கி நிற்க... "இது... இது ஒரு டைனோசர்!" என்று நாய... மேலும் பார்க்க