DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI Imper...
கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை
பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்களை புறவழிச் சாலையில் செல்ல போலீஸாா் அறிவுறுத்த வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எ.ஜெகதீசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
பவானியில் இருந்து மேட்டூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதாலும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும் பள்ளிக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
எனவே பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக லட்சுமி நகரில் இருந்து குருப்பநாயக்கன்பாளையம் வரை போடப்பட்டுள்ள புறவழிச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போலீஸாா் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.