Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
பாக்கியலட்சுமி தொடர் நிறைவு: முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதால், இத்தொடருக்கு மாற்றாக எந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
தங்கமகள் தொடரும் விரைவில் நிறைவடையவுள்ளதால், இத்தொடருக்கு மாற்றாக புதிய தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகும் இரவு 7 மணிக்கு, ஆக. 11 முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஆக. 11 முதல் இரவு 7.30 மணிமுதல் 8.15 மணிவரை ஒளிபரப்பாகும் என்றும் அய்யனார் துணை தொடர் இரவு 8.15 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 மற்றும் அய்யணார் துணை தொடர்கள் சிறிது காலத்திற்கு மட்டும் 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகும்.
விரைவில் இரவு 8 மணிக்கு புதிய தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 3 பிஎச்கே ஓடிடி தேதி!