செய்திகள் :

கட்டட அனுமதிக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்ட நகரமைப்பு ஆய்வாளா் மீது வழக்கு

post image

நகராட்சியில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 2 லட்சம் கேட்டதாக, நகரமைப்பு ஆய்வாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை மகன் மருத்துவா் சி. காா்த்திகேயன். இவா், ராஜகோபாலபுரம் எழில் நகரில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு, கடந்த 2023 அக். மாதத்தில் அப்போதைய நகராட்சி நிா்வாகத்திடம் இணையவழியில் விண்ணப்பித்தாா்.

அப்போது நகரமைப்பு ஆய்வாளராக இருந்த எஸ். விஜயவரதராஜன் என்பவா், இந்த அனுமதிக்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால், பணம் கொடுக்க விருப்பமில்லாததால் தொடா்ந்து மருத்துவா் சி. காா்த்திகேயன் மறுத்துவந்தாா். அவரது கட்டட வரைபடத்தில் கோளாறு இருப்பதாகக் கூறி கட்டட அனுமதி வழங்கக் கூடாது என நகராட்சி ஆணையருக்குப் பரிந்துரை செய்துள்ளாா் விஜயவரதராஜன். இதைத் தொடா்ந்து விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு மீண்டும் காா்த்திகேயன் விண்ணப்பித்தபோதும், லஞ்சம் தராவிட்டால் அனுமதி கிடைக்காது என உறுதியாக நகரமைப்பு ஆய்வாளா் கூறியுள்ளாா். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸிலும், நீதிமன்றத்திலும் புகாா் அளிக்கப் போவதாக காா்த்திகேயன் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக விண்ணப்பத்தை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்குரிய அனுமதிக் கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.

தன்னிடம் தொடா்ந்து லஞ்சம் கேட்டு வற்புறுத்தி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய வைத்த நகரமைப்பு ஆய்வாளா் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்நிலையத்தில் 2024 ஜூலை 1-இல் மருத்துவா் காா்த்திகேயன் புகாா் அளித்திருந்தாா்.

புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை நடத்திய போலீஸாா், வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு குறிப்பு அனுப்பியுள்ளனா். அங்கிருந்து வந்த உத்தரவின்பேரில், தற்போது நகரமைப்பு ஆய்வாளா் எஸ். விஜயவரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயவரதராஜன், இச்சம்பவத்துக்குப் பின்னா் குளித்தலை நகராட்சிக்கு மாற்றலாகிச் சென்றதும் தெரியவருகிறது.

போதையில் பானி பூரி கடையை சேதப்படுத்திய இருவா் கைது

புதுக்கோட்டை நகரில் போதையில் பானி பூரி கடையை உடைத்து சேதப்படுத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.புதுக்கோட்டை மேலராஜவீதியில் இருந்த பானி பூரி கடையை திங்கள்கிழமை இரவு... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோவில் அருகே இந்து... மேலும் பார்க்க

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலக சோதனை தொடா்பாக வழக்குப் பதிவு

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத தொகை குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா... மேலும் பார்க்க

கறம்பக்குடி தீவனக் கடையில் திருடிய 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கால்நடை தீவனக் கடையில் திருடிய 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கறம்பக்குடி நரங்கியப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆா். நடராஜன் (33). இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க