மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
கீழடியில் எடப்பாடி பழனிசாமி!
கீழடி அருங்காட்சியத்தை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டார்.
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தற்போது தென் தமிழகத்தில் பிரசாரத்தைத் துவங்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தின் கீழடி பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக காவல்துறையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில், "அஜித்குமார் கொலையில், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.