செய்திகள் :

Real Estate: `என்ன கண்டிஷன்; எத்தனை ஆண்டுகள்?' - பழைய வீடு வாங்கலாமா, கூடாதா?

post image

பழைய வீட்டை வாங்க போகிறீர்கள் என்றால் உங்கள் கண்முன்...

1. பழைய வீட்டை வாங்கலாமா... அது பாதுகாப்பா?

2. வாங்கினால், எந்தக் கண்டிஷனில் இருக்கும் வீட்டை வாங்கலாம்?

3. எவ்வளவு ஆண்டுகள் ஆன வீட்டை வாங்கலாம்?

போன்ற ஏகப்பட்ட கேள்விகள் எட்டிப்பார்க்கும்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.
சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி
சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி

``பழைய வீட்டை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?"

1. கட்டடத்திற்கு சட்டரீதியான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா

2. தெளிவான உரிமைப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா

3. கட்டடத்தின் மீது ஏதேனும் வில்லங்கம் உள்ளதா

4. கட்டடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு

5. கட்டிடத்தின் தற்போதைய வயது

6. கட்டிடம் அமைந்துள்ள சாலையின் அகலம் மற்றும் விஸ்திரம்

7. கட்டடத்தின் தரை மட்ட அளவு மற்றும் தள மேற்குறையின் உயரம்

8. கட்டடத்தின் தற்போதைய தேய்மான மதிப்பு

9. கட்டடத்தின் தற்போதைய ஸ்திரத்தன்மை

10. கட்டட குடிநீர் வசதி, கழிவு / கழிவுநீர் /மழை நீர் வடிகால் வசதிகள்

11. கட்டட மின்சார இணைப்பு

12. கட்டட உள்கட்டமைப்பு பணிகள்

13. அரசுத் துறைகளுக்கு கட்டடம் வாங்கும் தேதி வரை அனைத்து வரி / கட்டணங்கள் சரியாக தற்போதைய காலம் வரையில் கட்டப்பட்டிருக்கிறதா

14. கட்டடத்தின் மீது ஏதேனும் வங்கி அல்லது வேறு ஏதேனும் கடன் சுமை மற்றும் அவை சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா

15. கட்டடத்தில் மேற்கொள்ள வேண்டிய பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் இருப்பின் அதன் தற்போதைய செலவின் மதிப்பீடு

16. கட்டடம் அமைந்துள்ள சாலையின் அமைப்பு மற்றும் ஏதேனும் அரசு சார்ந்த நில கையகப்படுத்துதல் நடவடிக்கை குறித்து தகவல்கள் உள்ளனவா

17. கட்டடம் உள்ள இடத்தில் மழை நீர் வெள்ளம் பாதிப்பு உள்ளனவா

18. கட்டடம் மறு விற்பனை செய்ய வேண்டுமானால் அதன் சாத்திய கூறுகள்.

`யார் யாரிடம் ஆலோசனை பெற வேண்டும்?'

1. கட்டடம் அமைந்திருக்கும் நிலம் மற்றும் கட்டடத்தின் அரசு சார்ந்த சட்ட ரீதியான அனுமதிகள், கட்டத்தின் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா, கட்டடத்தின் உரிமையில் சிக்கல் உள்ளதா போன்றவை குறித்து ஒரு தேர்ந்த வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுங்கள்.

2. நிதி உதவி, நிதி நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை தொடர்பான தகவல்கள் குறித்து தெளிவு பெற ஒரு நிதி மற்றும் கணக்குகள் அறிந்த ஒரு நிதி நிபுணர் ஆலோசனை பெறலாம்.

3. கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, கட்டடத்தில் மேற்கொள்ள வேண்டிய பழுது வேலைகள் குறித்து சிவில் மற்றும் கட்டமைப்பு குறித்து பொறியாளரிடம் கருத்து பெறுங்கள்.

வீடு
வீடு

`கட்டடத்தின் வயது என்னவாக இருக்கலாம்?'

பொதுவாக கட்டடத்தின் வயது 40 - 80 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

இந்த வயது...

1. கட்டடத்தின் கட்டுமான தரம்,

2. கட்டடத்தில் பயன்படுத்தியுள்ள கட்டட பொருள்கள்,

3. கட்டடத்தில் வழக்கமாக பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளுதல்,

4. கட்டடத்தின் இருப்பிடம்,

5. கட்டடம் அமைந்துள்ள சுற்றுச்சூழல்,

6. கட்டடம் இருக்கும் நிலத்தின் மண்ணின் தன்மை மற்றும் தரம்,

7. கட்டடம் கட்டும் பொறியியல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுதல்,

8. கட்டமைப்பின் நிலைத்தன்மை

போன்றவற்றை பொருத்து அமையும்.

அதனால், வயதோடு, இவற்றையும் கவனியுங்கள்.

`பழைய வீடு வாங்குவது நல்லதா?'

இந்தக் கேள்வி முழுக்க முழுக்க கீழ் வரும் காரணிகளை பொறுத்தது.

1. கட்டடத்தின் வயது மற்றும் தற்போதைய கண்டிஷன்,

2. கட்டடத்தைப் புதுப்பிக்க முடியுமா, முடிந்தால், அதற்கு எவ்வளவு செலவு ஆகும்,

3. கட்டட பராமரிப்பு செலவுகள்,

4. கட்டடம் அமைந்திருக்கும் முக்கிய லோகேஷன்,

5. கட்டடம் அமைந்துள்ள இடம் தாராளமான தளவமைப்பு கொண்டுள்ளதா,

6. நிறுவப்பட்ட சூழல்,

7. கட்டடம், அதைச் சுற்றியுள்ள வசதி வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்,

8. கிடைக்க பெரும் வாடகை வருமானம்,

9. கட்டடம் மற்றும் அது அமைந்திருக்கும் இடத்தின் சந்தை விலை மதிப்பு குறுகிய கால அளவில் பன்மடங்கு உயருமா,

10. சட்ட மற்றும் நிதி சம்பந்தம் குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் உரிய அறிவார்ந்த நபரிடம் நன்கு சரிபார்த்தல்,

11. கட்டடத்தின் தற்போதைய தேய்மான மதிப்பு,

12. சந்தை வளர்ச்சி போக்கு,

13. நிலத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்,

14. மறுவிற்பனை சாத்தியக்கூறு,

15. தங்களது பட்ஜெட் சார்ந்திருக்கிறதா?

ஆகியவற்றையே பொறுத்தே முடிவு செய்ய வேண்டும்.

நல்ல முதலீடா?
நல்ல முதலீடா?

`பழைய வீடு நல்ல முதலீடா?’

1. கட்டடத்தின் (குடியிருப்பு மற்றும் வணிக) லோகேஷன் முக்கிய மற்றும் நல்ல சந்தை மதிப்புள்ள இடத்தில் இருந்தால்,

2. குறைந்த முதலீடு மற்றும் நல்ல வருமானம் ஈட்டும் கட்டடம் கிடைக்க பெற்றால்,

3. மூலதள மதிப்பு சீக்கிரம் பன்மடங்கு உயர்வதாக இருந்தால்,

4. அதிக வாடகை வருமானம் மற்றும் மறு விற்பனை கிடைக்கும் என்றால்,

5. கட்டடத்திற்கு ஆகும் நிதி மற்றும் இயக்க செலவுகள் குறைவாக இருக்குமாயின்,

5. குறைந்த வரிச்சுமை, சந்தை ஏற்ற இறக்கம், ஆபத்து தணிப்பு, உத்திசார்ந்த மேம்பாடு,

6. கட்டடம் அடிக்கடி காலி செய்யப்படாத மற்றும் காலி செய்யப்பட்டாலும் உடனடியாக வாடகைதாரர் வந்துவிடும் மைய இடத்தில் இருந்தால்,

7. ரிஸ்க் மிக குறைவாக இருந்தால்,

பழைய வீட்டு முதலீடு சூப்பரோ சூப்பர்.

மேலும், ஒரு கட்டடத்தின் மூலம் சுமார் 10 - 12 சதவிகித வருடாந்திர வருவாய் கிடைக்க பெற்றால்,அது ஒரு அருமையான முதலீடு எனவும், சுமார் 5 - 7 சதவிகிதம் வரை வருடாந்திர வருவாய் கிடைக்குமானால் அது ஒரு நியாயமான முதலீடு என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

ஆக, இதை வைத்தும் செக் செய்யலாம்". என்கிறார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

நிலம் வாங்க போறீங்களா? இந்த 19 விஷயங்களையும் கண்டிப்பா செக் பண்ணுங்க மக்களே..!

ஒரு நிலத்தைப் பார்ப்பது... பிடித்தால் வாங்குவது... - இது மட்டும் நிலம் வாங்கும் பிராசஸ் கிடையாது. நிலத்தைப் பார்த்து, பிடித்தப் பிறகு, ஒரு சில 'செக்'குகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான், நிலம் ... மேலும் பார்க்க

நிலம், வீடு எந்த மதிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்? பெண்களுக்கு இருக்கும் சூப்பர் தள்ளுபடி

நிலம் அல்லது வீடு வாங்குவதில் மிக மிக முக்கியம், 'பத்திரப் பதிவு'. 'நிலம், வீடு எந்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும்?', 'முத்திரைக் கட்டணம் எவ்வளவு?', 'பதிவுக் கட்டணம் எவ்வளவு?' என்று ஏகப்பட்ட கேள்விகள... மேலும் பார்க்க