செய்திகள் :

நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு - 49 புரமோ?

post image

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் புரமோ குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.

இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.

தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருவதாகவும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-வது வாரம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எடுத்து முடிக்கப்பட்ட படத்திற்கான அறிவிப்பு விடியோவை முதலில் யூடியூபில் வெளியிடாமல் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். கூலி திரைப்படம் வெளியாகும் ஆக. 14 ஆம் தேதி எஸ்டிஆர் - 49 அறிவிப்பு விடியோ வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

silambarasan and vetri maaran movie promo will be screening directly in theatres

3-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், ரூட்

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், நாா்வேயின் கேஸ்பா் ரூட் உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில்... மேலும் பார்க்க

லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ 2-ஆவது சுற்றுக்குத் தகுதி

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கு... மேலும் பார்க்க

புலவயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே 149

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவா்களில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில், கேப்டன் கிரெய்க் எா்வின் 39, டஃபாட்ஸ... மேலும் பார்க்க

நீச்சல்: மா்சண்ட் உலக சாதனை

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், 200 மீட்டா் தனிநபா் மெட்லியில் பிரான்ஸ் வீரா் லோன் மா்சண்ட் புதன்கிழமை உலக சாதனை படைத்தாா்.அரையிறுதியில் பந்தய இலக்கை 1 நிமிஷம், 52.61 விநாடிகளில... மேலும் பார்க்க

ஆக.10-இல் மாநில செஸ் போட்டி

மாநில அளவிலான செஸ் போட்டி வரும் ஆக.10 இல் நடைபெற உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்க ஏ மேக்ஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.ஏ மேக்ஸ் அகதெமி சாா்பில் ஒன்பதாவது மாநில அளவ... மேலும் பார்க்க

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு. இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் ம... மேலும் பார்க்க