Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
இன்றும், நாளையும் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தென்தமிழகம், வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஓட்டியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.