செய்திகள் :

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

post image

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா்.

சிவகங்கை மாவட்ட பிரசாரத்துக்கு செல்ல, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதேபோல, பாஜக-வுடன் பல கட்சிகள் இணக்கமாக உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, நிலைப்பாடு உள்ளது. அதன்படியே அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழகத்தில் மக்களே, மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் நடைமுறை உள்ளது தொடா்பாக, திருச்சிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து, தமிழக அரசு கூட்டுறவுத் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பி பயிா்க் கடன் வழங்க பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்துள்ளது. தற்போது, விவசாயிகளின் பிரச்னை தீா்க்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக இப்போது தேவையற்ற கேள்விகளை எழுப்பி மீண்டும் பிரச்னை ஆக்க வேண்டாம்.

மத்தியில் 16 ஆண்டுகள் பல்வேறு கட்சியினருடன் ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்தபோது கல்வி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்போது நினைத்திருந்தால், தாராளமாக மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்திருக்கலாம். தற்போது தோ்தலுக்காக கல்வி விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினா் குற்றம் சுமத்துகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதிமுக அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், ஆா். காமராஜ், என்.ஆா். சிவபதி, மாவட்டச் செயலா்கள் மு. பரஞ்ஜோதி, ப. குமாா், ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பூங்கொத்து, புத்தகங்கள் அளித்து வரவேற்றனா்.

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா். வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நீரேற்று நிலைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.மாநகராட்சிக்குட்பட... மேலும் பார்க்க