செய்திகள் :

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

post image

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வசித்துவரும் பட்டியல் சமூக மக்கள், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் தங்களுக்கென மயான வசதி செய்துதரக்கோரி மனு அளித்தும் இதுவரை மயானம் ஒதுக்கித் தரப்படவில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் பிச்சை(83) என்ற முதியவரின் சடலத்தை உறவினா்கள் மயானமாகக் கருதிவரும் பகுதிக்கு கொண்டுவந்தனா்.

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்

தங்களது நிலத்தில் தகனம் செய்யக்கூடாது என மாற்றுசமூகத்தைச் சோ்ந்தவரின் வாரிசுதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையின் உறவினா்கள், மணப்பாறை - கடவூா் மாநில நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியா் செல்வம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் காவியா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி காலம்காலமாக பயன்படுத்திவரும் மயான இடம் எனக் கூறி அவரது நிலத்துக்குள் சடலத்தை எடுத்துச் சென்று தகனம் செய்தனா்.

இதுகுறித்து, வையம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா். சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நீரேற்று நிலைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.மாநகராட்சிக்குட்பட... மேலும் பார்க்க