கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்பதியின் மகள் விஷ்மிதா. திருச்சியிலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் இவா், பீமநகா் ஹீபா் சாலையில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில், மகளை பாா்ப்பதற்காக அனுஷியா திருச்சிக்கு திங்கள்கிழமை இரவு வந்தாா். அப்போது, பொருள்கள் வாங்கிக்கொண்டு யானை கட்டி மைதானம் சாலையில் நடந்து சென்றவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், அனுஷியா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.
இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலையத்தில் அனுஷியா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.